எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தமிழ் சினிமாவில் இன்றைய இளைஞர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ள நடிகர்கள் விஜய், அஜித் முதல் இரண்டு இடத்தில் இருப்பவர்கள். இருவரது ரசிகர்களுக்குள்ளும்தான் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சண்டை நடக்கும்.
இருவரது படங்களும் ஒரே நாளில் வெளியாகி 8 வருடங்களாகிவிட்டது. 2014ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி விஜய் நடித்த 'ஜில்லா', அஜித் நடித்த 'வீரம்' ஆகிய படங்கள் வெளிவந்தன. இரண்டுமே சுமாரான வெற்றியைத்தான் பெற்றன. அதற்குப் பிறகு இருவரது படங்களும் மோதிக் கொள்ளவில்லை.
அஜித் நடித்த 'வலிமை' படம் கடந்த வாரம் பொங்கலை முன்னிட்டு வெளியாக வேண்டியது. ஆனால், கொரோனா அலை காரணமாக வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. இதனிடையே, விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பும் முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகிறது. 'பீஸ்ட்' படம் ஏப்ரல் மாத வெளியீடு என திட்டமிடப்பட்டுத்தான் வேலைகள் நடந்து வந்தது. 'வலிமை' படத்தின் அடுத்த வெளியீட்டுத் தேதி எப்போது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இந்த கொரோனா அலைக்குத் தியேட்டர்கள் 50 சதவீத இருக்கை அனுமதியுடன் திறக்கப்பட்டிருந்தாலும் மக்கள் தியேட்டர்கள் பக்கம் மிக மிகக் குறைந்த அளவில்தான் வருகிறார்கள். மக்களை மீண்டும் வரவழைக்க 'வலிமை, பீஸ்ட்' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக வேண்டும், அல்லது ஒரே நாளில் வெளியாக வேண்டும் என திரையுலகில் சிலர் எதிர்பார்க்கிறார்கள்.
கடந்த வருட அலையின் போது 'மாஸ்டர்' படம் வெளிவந்துதான் திரையுலகத்தை மீட்டுக் கொடுத்தது. இந்த வருட அலைக்குப் பிறகு 'வலிமை, பீஸ்ட்' வந்துதான் திரையுலகை மீட்கும் என திரையுலகினர் எதிர்பார்ப்பது சரியானதுதான். ஆனால், இரண்டு தயாரிப்பாளர்களும் ஒரே நாளில் படத்தை வெளியிடுவார்களா என்பது சந்தேகம்தான். அடுத்தடுத்து வந்தால் கூட நன்றாகத்தான் இருக்கும், பொறுத்திருந்து பார்ப்போம்.