மொத்தமாக 100 மில்லியன் பார்வைகள் கடந்த 'சிக்ரி சிக்ரி' | சைலண்ட் ஆக 25 நாளில் 'ஆண்பாவம் பொல்லாதது' | சினிமா டூ அரசியல் : பாலிவுட்டின் ‛ஹீ மேன்' தர்மேந்திராவின் வாழ்க்கை பயணம் | ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார் | தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் | 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிவேதா பெத்துராஜ் |

ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்த 'ஆர்ஆர்ஆர்' படம் ஜனவரி 7ம் தேதி வெளியாக வேண்டிய படம். கொரோனா ஒமைக்ரான் அலை காரணமாக படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.
தியேட்டர்களில் மீண்டும் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படும் சூழலில் மட்டும் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஓரிரு மாதங்களில் இந்த அலை முற்றிலுமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, படத்தை ஏப்ரல் மாதக் கடைசியில் வெளியிடலாம் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'ஆர்ஆர்ஆர்' பட வெளியீட்டிற்காக மற்ற சில முக்கிய தெலுங்குப் படங்களின் வெளியீட்டைத் தள்ளி வைத்தனர். சிரஞ்சீவி நடித்துள்ள 'ஆச்சார்யா' படத்தை ஏப்ரல் 1ம் தேதி வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர். 'ஆர்ஆர்ஆர்' பட வெளியீட்டைப் பொறுத்து மற்ற தெலுங்குப் படங்களின் வெளியீடுகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.