டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி |
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் விருமன் பட்ததை முத்தையா இயக்குகிறார். முத்தையா இயக்குகிறார். கார்த்தி, அதிதி ஷங்கர், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, ராதிகா மற்றும் பலர் நடிக்கின்றார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தேனி, மதுரை சுற்றியுள்ள பகுதிகளில் 60 நாட்கள் தொடர்ந்து நடத்தப்பட்டது. திட்டமிட்டபடி படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது.
இந்த நிலையில் விருமன் யார்? என்பது குறித்து இயக்குனர் முத்தையா கூறியிருப்பதாவது: வாழ்க்கையில் எல்லோரும் தவறுகள் செய்வார்கள். அந்தத் தவறுகளை யாராவது தட்டிக் கேட்கணும். அப்பா, அம்மா, அண்ணன், அக்கான்னு யாரோ ஒருத்தர் அதை சுட்டிக்காட்டணும். நமக்கு நல்லது செய்யும் அந்த உறவு தான் நல்ல உறவு. அந்த நேர்மையை பேச வருபவன் தான் விருமன். விருமன் என்பது கார்த்தியின் பெயர். இது அவரது குலசாமியின் பெயர். விருமன்னா தேனிப்பக்கம் பிரம்மன் என்று சொல்வாங்க.
சாதுவாகவும், முரடனாகவும் எப்படி வேணும்னாலும் கார்த்தியை காட்டலாம். அவர் டைரக்டர்களுக்கு கிடைத்த வரபிரசாதம். இதில் எல்லாமே உறவுகள் தான். இந்த மண்ணோட மனிதர்கள் முன்னாடி எப்படியிருந்தாங்களோ, இன்றைக்கும் அப்படித்தான் இருக்கணும்னு சொல்றவன்தான் விருமன். உறவுகள் சூழ ஒற்றுமையோடு இருந்து, அவர்களுக்கு பிரச்னைனா முன்னாடி நிற்கிறவன் விருமன்தான். வன்முறை ஏரியாவைக் குறைச்சு, பேமிலி, ஆக்ஷனில் கவனம் செலுத்தியிருக்கேன்.
உறவுகளை மீறி வேறு எதுவும் இங்கே இல்லை. எங்கே போனாலும் இங்கேதான் வந்து சேரணும். விருமனைப் பார்த்தால் எல்லோருக்கும், அவர்களுக்கு பிடித்தமான இருவரை நினைத்துக் கொள்வார்கள். மறந்துபோன உறவு மனசுல வரும். நியாயங்களை, உறவுகளை எளிதில் காணக்கூடிய மனிதர்களை முன் நிறுத்தி இருக்கேன். அவ்வளவுதான்.
டைரக்டர் ஷங்கரோட பொண்ணு அதிதி ஷங்கர், தேன்மொழி என்கிற கேரக்டர்ல அசத்தியிருக்காங்க. ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ் படத்துக்கு தூண் மாதிரியானவர்கள். பந்தல் பாலு கேரக்டரில் கருணாஸ், குத்துக்கல்லுன்னு ஒரு கேரக்டரில் சூரி நடித்திருக்கிறார். இவர்களுடன் வசுமித்ரா, மனோஜ், ஆர்.கே.சுரேஷ், மைனா நந்தினின்னு நல்ல கேரக்டர்கள் நிறைய உள்ளன.
அம்மாவாக சரண்யா. அவங்கதான் கதையோட மைய புள்ளி. குணம் கெட்ட மனுஷங்களால் இந்த குலமே அழியுது. அப்படி யாரும் இருந்திடக் கூடாதுன்னு சொல்ல இத்தனை பேரும் முன்னே நிக்க வேண்டியிருக்கு. வடிவுக்கரசி தேனி ஜில்லாவோட பழம்பெரும் கிழவியாக, மிடுக்கா நடை உடை பாவனையில் வாழ்ந்திருக்காங்க. என்கிறார் முத்தையா.