வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
'வலிமை அப்டேட்' என எப்போது ஆரம்பித்தார்களோ, படம் வெளியாகும் வரை ''அப்டேட் கொடுங்க, அப்டேட் கொடுங்க” என அஜித் ரசிகர்கள் கேட்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகிவிட்டது.
ஒரு வழியா படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 13ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அடுத்த சில நாட்களில் கொரோனா பரவல் அதிகமாகியது. தியேட்டர்களில் 50 சதவீத இருக்கை அனுமதி, இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு என அமல்படுத்த வேண்டிய சூழ்நிலையும் ஆகியது.
'ஆர்ஆர்ஆர், ராதேஷ்யாம்' என மற்ற பெரிய பான்- இந்தியா படங்கள் தங்கள் வெளியீட்டைத் தள்ளி வைப்பதாக முன்கூட்டியே அறிவித்துவிட்டார்கள். ஆனால், வெளியீட்டிற்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் 'வலிமை' வெளியீடு பற்றிய அறிவிப்பு குழப்பமான நிலையிலேயே உள்ளது.
ஒரு பக்கம் 'வலிமை' கண்டிப்பாக வரும் என்ற தகவலும், தள்ளி வைக்க வாய்ப்புள்ளது என்று மற்றொரு தகவலும் வந்து கொண்டிருக்கிறது. இரவு நேர ஊரடங்கு என்பதால் மொத்தமாக ஒரு நாளைக்கு 3 காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டிய நிலை. ஞாயிற்றுக்கிழமைகளில் தான் படங்களுக்கான வசூல் அதிகம் இருக்கும். அதுவும் முழுவதுமாகக் கிடையாது.
இந்த நிலையில் எப்படி கடந்த வருடத்தின் சூப்பர் ஹிட், நம்பர் 1 வசூல் படமான 'மாஸ்டர்' படத்தை 'வலிமை' மிஞ்ச முடியும். 'மாஸ்டர்' படம் 50 சதவீத இருக்கை அனுமதி என்ற நிலையை மட்டுமே சந்தித்தது. தினசரி 4 காட்சிகள், ஞாயிறு காட்சிகள் என நடந்தது. அதில் விஜய், விஜய் சேதுபதி என இரண்டு முக்கிய நடிகர்கள் இருந்தார்கள். பாடல்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இப்படி சில விஷயங்கள் பிளஸ் பாயின்டாக படத்திற்கு கை கொடுத்தது.
'வலிமை'யில் வெளிவந்த இரண்டு பாடல்கள்தான் ஹிட்டாகி உள்ளது. டிரைலரில் பைக் சத்தம்தான் கேட்கிறது என்ற கமெண்ட்டுகள் அதிகம் வருகிறது. வெறும் ஆக்ஷன் மட்டும் போதுமா ? என்ற விமர்சனமும் டிரைலருக்கு வந்தது.
'மாஸ்டர்' படம் வந்த போது கொரோனா முதல் அலை குறையத் தொடங்கிய நேரம் என்பதை மறக்கக் கூடாது. 'வலிமை' வரும் இந்த சூழல் மூன்றாவது அலையின் தொடக்கம் என்பது குறிப்பிட வேண்டியது. குடும்பம் குடும்பமாக மக்கள் வந்தால்தான் 50 சதவீதத்தில் அதிக வசூல் கிடைக்கும்.
இதையெல்லாம் படக்குழுவினரும், படத்தைத் திரையிடுபவர்களும் யோசித்திருக்க மாட்டார்களா என்ன ?. .
ஆனாலும், அஜித் ரசிகர்கள் படத்தைப் பார்க்க ஆவலுடன் இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். 'வலிமை' பெயரைப் போலவே, எதையும் எதிர்த்து வலிமையாக வருமா, அல்லது ஒமிக்ரான் வரவால், தயங்கி ஒதுங்கிப் போகுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.