ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன், செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து தயாரித்துள்ள படம் அன்பறிவ். அஷ்வின் ராம் இயக்கியுள்ள இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். ஷிவானி ராஜசேகர் மற்றும் காஷ்மீரா நாயகிகளாக நடித்துள்ளனர்.
இவர்கள் தவிர நெப்போலியன், சாய்குமார், ஆஷா சரத், விதார்த், தீனா, அர்ஜை, சரத் ரவி, வினோத் சாகர் உள்பட பலர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாளை மறுநாள் (ஜன 7) டிஷ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
படத்தில் நடித்திருப்பது பற்றி ஆதி கூறியதாவது: காமெடியுடன் கலந்த பொழுதுபோக்கு படமாக உருவாகி உள்ளது. முதன் முறையாக இது எனக்கு பெரிய பட்ஜெட் படம். நிறைய நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். ஒரு கிளாசிக் கதை அதை மீண்டும் குடும்பங்களோடு கொண்டாடும் படமாக உருவாக்கியுள்ளோம். ஒரு குடும்ப படத்தை மியூசிக்கலாக உருவாக்க நினைத்துதான் இயக்குநர் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் இசைக்காக நிறைய உழைத்திருக்கிறோம்.
எம்ஜிஆர் படங்கள் முதல் ஏகப்பட்ட க்ளாசிக் படங்கள் இந்த மாதிரி கதையில் வந்திருக்கிறது. அதையேதான் கொஞ்சம் வித்தியாசமாக தர முயற்சித்திருக்கிறோம். கமர்ஷியலை தாண்டி கிளாசிக்கான படைப்பாக இப்படம் இருக்கும். வேகமாக ஓடிட்டு இருக்கிற உலகத்துல, அறிவோட இருக்குறதுனா அன்போட இருக்கிறது தான் என்பதை தான் இப்படம் சொல்கிறது.
இரட்டை வேடம் செய்தது சவலாக இருந்தது. நமக்கான கனவுகள் சாத்தியமாகும்போது கஷ்டப்படவும் தயாராக இருக்க வேண்டும். அந்த வகையில் திரைத்துறையில் இருப்பதே எனது கனவு தான். அதில் இரட்டை வேடத்தில் நடிப்பது வரம் தான். 5 படங்களுக்கு செய்ய வேண்டிய உழைப்பை இந்த ஒரு படத்திற்கு செய்ய வேண்டி இருந்தது. ஆனாலும் நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. என்றார்.