சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் 'பஹேலி கீத் 2' பாடல்: முகேஷ் கன்னா வெளியிட்டார் | ஒவ்வொரு கேரக்டருக்கும் இரண்டு போஸ்டர் ; நானி பட இயக்குனரின் புதிய ஐடியா | 20 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கூலி' டிரைலர் | திரிஷ்யம்-2 தயாரிப்பாளர் மீது பண மோசடி வழக்கு ; தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இயக்குனர் மீது பொய் வழக்கு ; நடிகையை தொடர்ந்து அவரது வழக்கறிஞரும் கைது | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் | காந்தாரா 2வில் ‛கனகாவதி' ஆக ருக்மணி வசந்த் | கூலி படத்தில் அதிர்ச்சியூட்டும் இடைவேளை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல் | அஜித் 64 படத்தில் இணையும் இரண்டு நாயகிகள் | செல்வாக்கு மிக்கவர்களுக்கு கூட வளைந்து கொடுக்க மறுக்கும் சென்சார் போர்டு? |
நடிகர் சிரஞ்சீவியின் அறக்கட்டளை, யோதா அமைப்புடன் இணைந்து சினிமா தொழிலாளர்களுக்கு நோய் கண்டறியும் செயல்களுக்காக ஹெல்த் கார்டுகளை வழங்கி இருக்கிறது. இதையடுத்து தெலுங்கு சினிமாவை சேர்ந்த தொழிலாளர்கள் அவரை சினிமாவின் பாதுகாவலன் என்று அழைத்திருக்கிறார்கள்.
அதையடுத்து சிரஞ்சீவி வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், நாம் சினிமா துறைக்கு பாதுகாவலராக இருக்க விரும்பவில்லை. எனக்கு அந்த பணி தேவையில்லை. இந்த தொழிலின் மகனாக தொழிலாளர்களுக்கு சேவை செய்வேன். ஆனால் சினிமா துறையினரோ அல்லது நண்பர்களோ சண்டையிட்டாலோ அல்லது சமரசம் செய்ய வேண்டி இருந்தால் அதில் நான் ஈடுபட மாட்டேன். தொழிலாளர்களுக்கு ஏதேனும் நிதி, இடையூறுகள் அல்லது உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால் நான் அவர்களுக்கு ஆதரவாக நிற்பேன் என்று கூறி இருக்கிறார்.
தெலுங்கு சினிமாவின் தாசரி நாராயண ராவ் பல ஆண்டுகளாக பெத்தாவாக தெலுங்கு சினிமாவில் பணியாற்றினார். அவரது மறைவிற்குப் பிறகு தெலுங்கு சினிமாவினர் சிரஞ்சீவி மீது நம்பிக்கை வைத்து அவரை பெத்தா என்று அழைக்கத் தொடங்கினார்கள். தெலுங்கானா அரசும் அவரை இதேபோல் கவுரவித்தது. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சிரஞ்சீவியை தனது இல்லத்திற்கு அழைத்து தெலுங்கு திரையுலகில் உண்மையான பிரதிநிதி என்று பாராட்டினார்.
ஆனபோதிலும் மா நடிகர் சங்கத்தின் தேர்தல்கள் மற்றும் சினிமா டிக்கெட் விலை ஏற்றம் காரணமாக ஆந்திரப்பிரதேச அரசாங்கத்திற்கும், சிரஞ்சீவிக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே சினிமாத்துறையின் பாதுகாவலனாக தான் இருக்க விரும்பவில்லை என்று சிரஞ்சீவி அறிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.