சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் 'பஹேலி கீத் 2' பாடல்: முகேஷ் கன்னா வெளியிட்டார் | ஒவ்வொரு கேரக்டருக்கும் இரண்டு போஸ்டர் ; நானி பட இயக்குனரின் புதிய ஐடியா | 20 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கூலி' டிரைலர் | திரிஷ்யம்-2 தயாரிப்பாளர் மீது பண மோசடி வழக்கு ; தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இயக்குனர் மீது பொய் வழக்கு ; நடிகையை தொடர்ந்து அவரது வழக்கறிஞரும் கைது | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் | காந்தாரா 2வில் ‛கனகாவதி' ஆக ருக்மணி வசந்த் | கூலி படத்தில் அதிர்ச்சியூட்டும் இடைவேளை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல் | அஜித் 64 படத்தில் இணையும் இரண்டு நாயகிகள் | செல்வாக்கு மிக்கவர்களுக்கு கூட வளைந்து கொடுக்க மறுக்கும் சென்சார் போர்டு? |
ராஜமவுலி இயக்கி உள்ள ஆர் ஆர் ஆர் படம் ஜனவரி 7ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது மறு தேதி குறிப்பிடாமல் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்து விட்டனர். இதற்கு கொரோனா மூன்றாவது அலை காரணம் என்று செய்திகள் வெளியான போதும் உண்மை காரணம் அது மட்டுமே இல்லையாம்.
தற்போது தமிழ்நாடு, மகாராஷ்டிராவில் உள்ள தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். என்றாலும் ஆந்திரா, தெலுங்கானாவில் இந்த நிலை இல்லை. அதனால் திட்டமிட்டபடி ஆர்ஆர்ஆர் படத்தை வெளியிட படக்குழு தயாரானபோதும், ஆந்திராவில் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு உள்ள பல தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாகவே ஆர்ஆர்ஆர் படம் இந்தியா முழுக்க வெளியான போதும், ஆந்திரா, தெலுங்கானாவில் வசூலை அதிகமாக இருக்கும் என்பதால் இந்த குறைந்த கட்டணத்தில் போட்ட பணத்தை எடுப்பது சிரமம் என்ற விஷயத்தை கருத்தில் கொண்டுதான் படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்து விட்டார்களாம்.
இது குறித்து கடந்த 2020ஆம் ஆண்டிலேயே சிரஞ்சீவி, ராஜமவுலி உள்ளிட்ட தெலுங்கு திரையுலகினர் அங்குள்ள முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து கோரிக்கை வைத்தனர், அப்போது பெரிய பட்ஜெட் படங்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து இருந்தார்கள். ஆனால் ஜெகன் மோகன் ரெட்டி அந்த கோரிக்கையை ஏற்காமல் ஏற்கனவே இருந்த டிக்கெட் கட்டணத்தையும் தற்போது குறைத்து விட்டுள்ளார். இதன் காரணமாகவே இந்த நேரத்தில் படத்தை வெளியிட்டால் போட்ட பணத்தை எடுப்பது கடினமாகிவிடும் என்று தான் ஆர்ஆர்ஆர் படத்தின் ரிலீசை தள்ளி வைத்து விட்டதாக கூறப்படுகிறது. அதனால் இது குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் அங்குள்ள திரையுலகினர் நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.