Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழில் வெளிவரும் ரஜிதாவின் மலையாள படம்

02 ஜன, 2022 - 01:35 IST
எழுத்தின் அளவு:
Rajitha's-Malayalam-movie-to-be-released-in-Tamil

அனுராக கரிக்கின் வெல்லம் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானர் ரஜிதா விஜயன். அதன்பிறகு பல படங்களில் நடித்தார். தமிழில் கர்ணன், ஜெய் பீம் படங்களில் நடித்துள்ளார். தற்போது சர்தார் படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து வருகிறார்.

ரஜிதா நடிப்பில் 2019ம் ஆண்டு வெளியான மலையாளப் படம் ஜூன். ஜோஜு ஜார்ஜ் ரஜிஷா விஜயனின் தந்தையாக நடித்துள்ளார். இவர்கள் தவிர சர்ஜினோ காலித், அர்ஜுன் அசோகன், சன்னி வேயோன், அஜு வர்க்கீஸ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். அகமத் கபீர் இயக்கி இருந்தார். பள்ளி மாணவர்களின் உளவியல் ரீதியான பிரச்சினைகளை பேசும் படம்.

இந்த படம் தற்போது தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. தமிழ் பாடல்கள் மற்றும் வசனங்களை நவீன் முத்துசாமி எழுதியுள்ளார். ஆன்ட் அண்ட் எலிபன்ட்ஸ் சினிமாஸ் சார்பில் அனில் கே.ரெட்டி மற்றும் வி.ஜெயபிரகாஷ் ஆகியோர் வெளியிடுகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அம்மா ஆகிறார் காஜல் அகர்வால்அம்மா ஆகிறார் காஜல் அகர்வால் சிம்புவுக்கு ஜோடியான சித்தி இத்னானி சிம்புவுக்கு ஜோடியான சித்தி இத்னானி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)