இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

இந்திய சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர் இளையராஜா. 1400க்கும் அதிகமான படங்களில் இசையமைத்துள்ள இவர் இப்போதும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். நேற்று இரவு முதல் இளையராஜா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளதாக செய்தி பரவியது. இதை அவரது மேலாளர் மறுத்திருந்தார். அவர் ஆன்மிக பயணம் சென்றுள்ளார் என்றார்.
இந்நிலையில் இளையராஜா இந்த விஷயத்தை குறிப்பிடாமல் புத்தாண்டு வாழ்த்து கூறுவது போன்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் காரில் பயணம் செய்யும் இளையராஜா, தனது இசையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‛சகலகலா வல்லவன்' படத்தில் இடம் பெற்ற ‛‛இளமை இதோ இதோ....'' என்ற புத்தாண்டு வாழ்த்து பாடலை பாடியபடி வாழ்த்து சொல்லி உள்ளார். இளமை இதோ, இனிமை இதோ என்ற வார்த்தை வரும்போது தன்னை சுட்டிக்காட்டி உள்ள அவர் கடைசியில் ‛இதெப்படி இருக்கு' என தெரிவித்துள்ளார்.
தன்னைப்பற்றி பரவிய வதந்திக்கு பதிலடி கொடுக்கவே இப்படியொரு வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார் என்கின்றனர் திரையுலகினர்.
கமல் வாழ்த்து
இளையராஜா அவர்களை 3 நாட்களுக்கு முன்பு தான் சந்தித்தேன். இளமை மாறாத ராஜாவாக குதூகலமாக பேசிக் கொண்டிருந்தார். அதையும் விட இளமை கூடியவராய் இன்று இணையதளத்தில் இளமை இதோ இதோ என்று பாடியதைப் பார்த்தேன். மனதளவில் என்றும் இளமை மாறாதிருக்கும் அண்ணனுக்கு ஹேப்பி நியூ இயர் என பதிவிட்டுள்ளார்.