மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவில் தயாராகும் படங்கள் இதுவரை தெலுங்கு, மலையாள மொழிகளில் டப் செய்யப்பட்டு வந்தன. அதேசமயம் ரஜினி நடித்த கபாலி, காலா, எந்திரன், 2.0 என பல படங்கள் ஹிந்தியிலும் வெளியிடப்பட்டு வசூலித்து வந்துள்ளன. விஜய்யின் மாஸ்டர் படம் ஹிந்தியில் வெளியிடப்பட்டு பெரிதாக வசூலிக்கவில்லை.
இப்படியான நிலையில் தற்போது வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படத்தை மும்பையிலும் அதிகமான தியேட்டர்களில் வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதிலும் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் ஹிந்திப் பதிப்பு இதுவரை 40 கோடி வசூலித்திருப்பதால் அஜித்தின் வலிமை படத்தையும் பெரிய அளவில் விளம்பரம் செய்து வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. அதனால் புஷ்பா படத்தின் வசூலை வலிமை முறியடிக்குமா? என்கிற எதிர்பார்ப்புகள் தற்போது எழுந்திருக்கிறது.