ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி | தேசிய விருது பெற்றதற்காக கொடுத்த பார்ட்டியில் பணம் இல்லாமல் பாத்திரம் கழுவ தயாரான ஆசிஷ் வித்யார்த்தி | இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி | புதிய காதலி உடன் முன்னாள் காதலர் : தமன்னா கொடுத்த பதில் |
திருச்சிற்றம்பலம், மாறன், நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்து வரும் தனுஷ் அடுத்தபடியாக ராக்கி, சாணிக்காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த தகவலை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தி இருந்தார். இப்படம் 1950 காலக்கட்டத்தில் நடக்கும் வரலாற்று கதையை மையப்படுத்தி உருவாக இருக்கிறது.
மேலும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ராக்கி படம் தற்போது திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் விரைவில் அவர் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கும் வேலைகளில் இறங்க இருக்கிறார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை யமைக்கிறார்.
இதற்கு முன்பு தனுஷ் நடிப்பில் வட சென்னை, கர்ணன், ஜகமே தந்திரம் போன்ற படங்களுக்கு இசையமைத்திருக்கும் சந்தோஷ் நாராயணன் நான்காவது முறையாக மீண்டும் தனுஷ் நடிக்கும் படத்தில் இணையபோகிறார். இதுதவிர ரஜினி நடிப்பில் தனுஷ் தயாரித்த காலா படத்திற்கும் சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.