மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
இயக்குனர் பா.ரஞ்சித் நடத்தும் நீலம் பண்பாட்டு மையம் கானா பாடகர்களுக்கு மேடை அமைத்துக் கொடுத்து அவர்களுக்கான அங்கீகாரத்தை கொடுத்து வருகிறார். இதனால் அவர்களுக்கு பல வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது.
இந்த நிலையில் சில கானா பாடகர்களின் வரம்புகள் எல்லை மீறும் சம்பவங்களும் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக இணையத்தில் வலம் ஒரு பாடல் மனதை வலிக்க செய்கிறது. பெரம்பூரை சேர்ந்த சரவணன் (சரவெடி சரண்) என்பவர் மேடையில் ஒரு கானா பாடலை பாடுகிறார். அந்த பாடல் வரிகள் சிறுமிக்கு குச்சி ஐஸ் வாங்கி கொடுப்போம். அதன்பிறகு அவளை வாந்தி எடுக்க வைப்போம் என்கிற பொருள் தருகிற மாதிரியான பாடல் வரிகளை பாடி உள்ளார்.
இதுகுறித்து பல தரப்பிலிருந்தும் புகார்கள் வரவே திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின் பேரில் சைபர் க்ரைம் போலீசார் பாடகர் சரவணனை கைது செய்துள்ளனர்.
பின்னர் போலீசாரிடம் மன்னிப்பு கடிதம் அளித்த சரண், ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தான் பாடிய பாடலுக்கு வருத்தம் தெரிவித்துள்ள சரண், பிறர் மனதை புண்படுத்தும் வகையில் பாடியதற்காக மன்னிப்பும் கேட்டுள்ளார்.