ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் |
கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் படம் விக்ரம். இதனை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கிறார். தற்போது படம் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது.
இது தொடர்பாக ராஜ்கமல் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது : கமல்ஹாசனின் 232வது படமான விக்ரம் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் டிசம்பர் 10 முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் கமல்ஹாசன் கலந்து கொள்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பல கட்டமாக படப்பிடிப்பு நடந்து வந்தது. கமல்ஹாசனுக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக சற்று இடைவெளி எடுத்துக் கொண்டார். தற்போது ஓய்வுக்கு பிறகு புத்துணர்ச்சியுடன் சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
முழுவீச்சில் நடைபெறும் இறுதிகட்ட படப்பிடிப்பில் கமல்ஹான், விஜய்சேதுபதி, பகத் பாசில் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. கோடை விடுமுறைக்கு படம் திரைக்கு வர இருப்பதால் இரவு பகலாக பணிகள் நடந்து வருகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.