பிளாஷ்பேக்: எம் ஜி ஆருக்கே பிடித்த எம் ஜி ஆர் திரைப்படம் “பெற்றால்தான் பிள்ளையா” | கழட்டி விட்ட தம்பியால் புலம்பும் இயக்குனர் அண்ணன் | அருளானந்தபுரம் டூ ஹாலிவுட் ஜெயித்த ஜெர்மி எர்னஸ்ட் | பல்லாண்டு வாழ்க, சந்திரமுகி, லோகா சாப்டர் 1 - ஞாயிறு திரைப்படங்கள் | ‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் |

இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதி, இயக்கியுள்ள ஆனந்தம் விளையாடும் வீடு படத்தை ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பில் ரங்கநாதன் தயாரித்துள்ளார். இப்படத்தில் கவுதம் கார்த்திக், சேரன், ஷிவாத்மிகா ராஜசேகர், சரவணன், விக்னேஷ், டேனியல் பாலாஜி, மொட்டை ராஜேந்திரன், சவுந்தரராஜா, முனிஷ்ராஜ், சிங்கம்புலி உள்பட பலர் நடித்துள்ளனர். சித்து குமார் இசையமைத்துள்ளார், பொர்ரா பாலபாரணி ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் நாளை (டிச 24) வெளிவருகிறது.
படத்தில் நடித்திருப்பது பற்றி சேரன் கூறியிருப்பதாவது : ஆனந்தம் விளையாடும் வீடு என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படைப்பு. இதை நான் வெறும் கருத்துக்காக சொல்லவில்லை, படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகரும் அதை மனதிற்குள் உண்மையாக உணர்ந்தார்கள். படப்பிடிப்பின் போது நான் என் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருந்தாலும், இப்படத்தை முடித்து திரையிட்ட போது எனக்கு மிக வித்தியாசமான அனுபவம் கிடைத்தது.
திரையில் நான் தான் நடித்துள்ளேன் என்பதையே மறந்துவிட்டேன், சில காட்சிகளில் அந்தக் கதாபாத்திரத்தைப் பார்த்து என் கன்னங்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. இது எனக்கு மட்டுமல்ல, இந்தப் படத்தில் நடித்த பல நடிகர்களுக்கும் இதே அனுபவம் தான் இருந்தது.
கவுதம் கார்த்திக் மிகவும் அன்பான மனிதர். அவர் குணத்தில் மிகவும் அரிய பண்பை கொண்டிருக்கிறார். எல்லா நடிகர்களுக்கும் நவீன நகர்ப்புற பையன் மற்றும் கிராமத்து பையன் என இரண்டு கேரக்டரிலும் ஜொலிக்கும் திறமை இருப்பதில்லை, ஆனால் இது அவருக்கு மிக எளிதாக பொருந்தி போகிறது.
நடிகை ஷிவாத்மிகா எனக்கு மகள் போன்றவர். அவளுடைய தொழிலின் மீதான அவரது ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் கண்டு நான் பெருமைப்படுகிறேன். ஆனந்தம் விளையாடும் வீடு குடும்பங்களுக்கிடையேயான பிணைப்பையும், சகோதரத்துவத்தையும் புதுப்பிக்கும் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். என்றார்.