7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

கோடியில் ஒருவன் படத்திற்கு பிறகு வெளிவர இருக்கும் விஜய் ஆண்டனியின் படம் தமிழரசன். தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்த படத்திற்கு தெலுங்கில் விக்ரம் ரத்தோட் என்று தலைப்பு வைத்துள்ளனர். எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கவுசல்யா ராணி தயாரித்துள்ளார். 
ரம்யா நம்பீசன் மற்றும் சுரேஷ்கோபி, ராதாரவி, சோனு சூட்,யோகிபாபு, ரோபோ சங்கர், கஸ்தூரி, சங்கீதா, சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர் ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன், கும்கி அஸ்வின்,மேஜ,ர் கவுதம், சுவாமி நாதன்,  முனீஸ்காந்த், உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார், இளையராஜா இசை அமைக்கிறார். பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார்.
படத்தின் தெலுங்கு வெர்சன் பாடல் வெளியீட்டு விழா திருப்பதியில் நடந்தது. அப்பல்லோ புரொடக்ஷன் சார்பில் ரவுரி வெங்கட சாமி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியிடுகிறார்.