மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

கண்ட நாள் முதல் படம் மூலம் அறிமுகமான ரெஜினா கசான்ட்ரா தொடர்ந்து தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். இந்த ஆண்டு வெளியான 'சக்ரா', 'நெஞ்சம் மறப்பதில்லை' ஆகிய படங்களைத் தொடர்ந்து, தெலுங்கில் உருவாகும் புதிய படத்துக்காக ரெஜினா தயாராகி வருகிறார். தற்போது கார்த்திக் ராஜூ இயக்கத்தில் 'சூர்ப்பனகை' படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதுதவிர பல படங்களை கைவசம் வைத்துக்கொண்டு நடித்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற பத்திரிக்கையான போர்ப்ஸ் பத்திரிக்கையின் அட்டை படத்தில் நயன்தாரா இடம் பெற்றிருந்தார். இதைத் தொடர்ந்து அந்த பத்திரிக்கையின் அட்டை படத்தில் நடிகை ரெஜினா கசான்ட்ரா புகைப்படமும் இடம்பெற்றது. தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் ரெஜினா தனது பிறந்தநாளை கொண்டாடினார். 'பிரேக்கிங் நியூஸ்' படப்பிடிப்பில் இருக்கும் ரெஜினா, படக்குழுவினர் இணைந்து பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கேக் வெட்டி கொண்டாடிய அந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.