'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' |
பிளாக் ஹவுஸ் பிக்சர்ஸ் சார்பில் எம்.மணிரத்னம் தயாரிக்கும் படத்தை குறும்பட இயக்குனர் ஏ.ஆர்.ஸ்டீபன் ராஜ் இயக்குகிறார். சந்தோஷ் பிரதாப், மாஸ்டர் மகேந்திரன், மைக்கேல் தங்கதுரை, வைஷ்ணவி , ராஜேஷ், லிவிங்ஸ்டன், சூப்பர் சுப்பராயன், கூல் சுரேஷ் நடிக்கிறார்கள். மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் ஸ்டீபன் ராஜ் கூறியதாவது: இது ஒரு ஹைப்பர் லிங்க் பாணியிலான படம். இதற்கு முன்பு இதுபோன்ற கதைகள் வந்திருந்தாலும் இந்த படம் அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். ஒரு சிலர் தவிர மற்ற அனைவருமே புதுமுகங்கள், புதிய முயற்சி. ஏற்கெனவே பக்காவாக திட்டமிட்டிருப்பதால் குறுகிய காலத்தில் படத்தை முடிக்க திட்டமிட்டிருக்கிறோம். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. என்றார்.