இன்னொரு இயக்குனரை நடிகராக களத்தில் இறக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் | சுவாசிகாவிற்கு லேசான காயம் | கனவு நிறைவேறிய நாள் - அஸ்வத் மகிழ்ச்சி | தங்கக் கடத்தலில் கைது செய்யப்பட்ட விக்ரம் பிரபு பட நாயகி | அது பிரபுவிற்கு சொந்தமானது : சிவாஜி வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்ய கோரி ராம்குமார் மனு | முதல் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மறக்காத சமந்தா | 20 நாட்கள் பிணமாக நடித்த ரூபா | ஆண்டனி வர்க்கீஸின் புதிய படம் அறிவிப்பு | மீண்டும் இணைந்த 'மெஹந்தி சர்க்கஸ்' கூட்டணி | பிளாஷ்பேக் : நீதிபதியில் 5 ஹீரோயின்கள் |
ஹிந்தி மற்றும் தென்னிந்திய மொழிப் படங்களுக்கு பிரபல பத்திரிகையான பிலிம்பேர் பல ஆண்டு காலமாக விருதுகளை வழங்கி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஓடிடி தளங்களும் பிரபலமானதால் கடந்த வருடம் முதல் ஓடிடி சீரிஸ்கள், வெப் ஒரிஜனல்கள் ஆகியவற்றிற்கும் விருதுகளை வழங்க ஆரம்பித்தது.
2021ம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. சிறந்த சீரிஸை இயக்கியதற்கான விருது 'ஸ்கேம் 1992' படத்தை இயக்கிய ஹன்சல் மேத்தாவிற்கு வழங்கப்பட்டது. அத்தொடரில் நடித்த பிரதிக் காந்தி சிறந்த நடிகருக்கான (சீரிஸ்) விருதைப் பெற்றார். 'தி பேமிலி மேன்' சீரிஸில் நடித்ததற்காக சமந்தா சிறந்த நடிகைக்கான (சீரிஸ்) விருதைப் பெற்றார்.
சிறந்த ஒரிஜனல் கதைக்கான விருது 'பேமிலி மேன்' சீரிஸிற்கும், சிறந்த ஒரிஜனல் திரைக்கதைக்கான விருது 'பேமிலி மேன் 2' சீரிஸிற்கும், சிறந்த வசனத்திற்கான விருது 'ஸ்கேம் 1992' சீரிஸிற்கும், சிறந்த திரைக்கதைத் தழுவல் விருது 'ஸ்கேம் 1992' சீரிஸிற்கும் வழங்கப்பட்டது.
சிறந்த நடிகைக்கான விருது பெற்ற சமந்தா அதற்காக பேமிலிமேன் குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.