ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா, கடந்த வருடம் எதிர்பாராத வகையில் உயிரிழந்தார். ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள சித்ராவை, ரசிகர்கள் இப்போதும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், அவர் இறந்து ஒருவருடம் ஆகிவிட்ட நிலையில் பலரும் தங்களது அஞ்சலியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், பாண்டியன் ஸ்டோர்ஸில் சித்ராவுடன் இணைந்து நடித்த ஸ்டாலின் முத்துவும், ஹேமாவும் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளனர்.
ஸ்டாலின் முத்து கூறுகையில், "மனித வாழ்வில் மரணம் இயற்கை தான். இயற்கையால் வந்தால் ஏற்கலாம். நீ வாழ வேண்டிய வயதில் வாடிய மலராகி உதிர்ந்து போன உன்னை எப்படி மறப்பது" என்றார்.
அதே போல் ஹேமாவும், "நீ இல்லாமல் ஒரு வருடம் கடந்துவிட்டது. நீ இப்போது சந்தோசமாக இருப்பாய் என நம்புகிறேன். நீ விரும்பியது போல் ஒரு வாழ்க்கையுடன் நீ திரும்பி வர வேண்டும் என கடவுளிடம் வேண்டி கொள்கிறேன். உன்னை அதிகம் மிஸ் செய்கிறேன். இது வெறும் போஸ்ட் அல்ல. என் நினைவு. லவ் யூ." என கூறியுள்ளார்.