மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான சுந்தர்.சி, 8ம் நூற்றாண்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து சங்கமித்ரா என்ற படத்தை தயாரித்து, இயக்கப்போவதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தார். இதில், ஜெயம்ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டு, அதன் போஸ்டர்களும் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது.
பாகுபலி பாணியில் உருவாகும் இந்த படத்துக்கு 300 கோடி பட்ஜெட்டும் தீர்மானிக்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டனர். ஆனால் சரியான இணை தயாரிப்பாளர் கிடைக்காததால் நீண்ட நாட்களாக படப்பிடிப்பை தொடங்காமல் கிடப்பில் போட்டனர். இதனால் ஸ்ருதிஹாசன் படத்தில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக இந்தி நடிகை திஷா பதானியை தேர்வு செய்தனர்.
என்றாலும் படம் கைவிடப்பட்டது. தற்போது சங்கமித்ரா பட பணிகளை மீண்டும் தொடங்க சுந்தர் சி முடிவு செய்துள்ளார். முழுக்க முழுக்க கிராபிக்சில் உருவாக்கப்பட்ட ஹாலிவுட் படமான 300 பாணியில் இந்த படத்தை குறைந்த பட்ஜெட்டில் உருவாக்க அவர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.