‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

2021ம் ஆண்டின் கடைசி மாதத்தில் இருக்கிறோம். பொதுவாக டிசம்பர் மாதத்தில் வழக்கத்தை விட பல படங்கள் வெளிவரும். கடந்த வருட கொரோனா முதல் அலை பாதிப்பால் அதிகப் படங்கள் வரவில்லை. இந்த வருடத்தில் மீண்டும் பழையபடி பல படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று இம்மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான டிசம்பர் 3ம் தேதி “பேச்சுலர், ரூ 2000, ஆள் இல்லாத ஊர்ல அண்ணன்தான் எம்எல்ஏ” ஆகிய படங்கள் தியேட்டர்களில் வெளியாகின. 'சித்திரைச் செவ்வானம்' படம் ஓடிடி தளத்தில் வெளியானது.
அடுத்த வாரம் டிசம்பர் 9ல் ஜெயில் படமும், 10ம் தேதி “தேள், முருங்கைக்காய் சிப்ஸ், ஆன்டி இண்டியன், க், 3.33,” ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. இந்தப் பட்டியலில் மேலும் சில படங்கள் சேரலாம் என்றும் தெரிகிறது.
டிசம்பர் 17ம் தேதி தெலுங்கில் தயாராகியுள்ள 'புஷ்பா' படத்தை தமிழ்நாட்டிலும் பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். அதனால், அப்போது தியேட்டர்கள் கிடைப்பது சிரமம் என்பதால் 10ம் தேதி பல படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 24ம் தேதி சில பெரிய படங்கள் வெளியாக உள்ளது.
அதனால் இந்த மாதம் எதிர்பார்ப்புகளை மீறி நிறைய படங்கள் வர வாய்ப்புள்ளது.




