‛தங்கமீன்கள், பேரன்பு' உள்ளிட்ட படங்களில் நடித்து தேசிய விருதும் பெற்றவர் சாதனா. தற்போது குமரியாகி, ‛வஞ்சிக் கோட்டை வாலிபன்' படத்தில் இடம் பெற்ற, ‛கண்ணும் கண்ணும்...' என்ற பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார். அதில், பத்மினி மற்றும் வைஜெயந்திமாலா என இருவரது நடனத்தையும் இவரே ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடலை ‛சரிகமா' நிறுவனம் யு-டியூப்பில் வெளியிட்டுள்ளது.