ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தென் இந்திய மொழிகளிலேயே பிரபலமாகி விட்டார். தெலுங்கிலும் இந்த படம் ஹிட் அடித்தது. கடந்த சில மாதங்களாக சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குனர் அனுதீப் உடன் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. தெலுங்கில் நவீன் பொலிசிட்டி நடிப்பில் வெளியான ஜதிரத்னலு திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அந்தப் படத்தை அனுதீப் என்பவர் இயக்கியிருந்தார். அந்தப் படத்தின் மூலம் அனுதீப் தெலுங்கு வட்டாரத்தில் பிரபலமாகியுள்ளார்.
தற்போது இந்தப் படத்தில் நடிகை ரித்து வர்மா கதாநாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ரித்து வர்மா கடைசியாக தமிழில் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அடுத்து தீனி என்ற படத்தில் அசோக் செலவனுடன் நடித்தார். இந்நிலையில் அவர் மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்க இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தும்.