சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக விளங்குபவர் நயன்தாரா. இவர் தற்போது தமிழ் படங்கள் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் படங்களின் இயக்குனரும் நயன்தாராவின் நீண்ட நாள் காதலருமான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் விஜய் சேதுபதிக்கு நயன்தாரா மற்றும் சமந்தா ஜோடியாக நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. முக்கோணக் காதல் கதைக்களத்தில் படம் உருவாகி வருகிறது.
தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. நயன்தாரா தன் சொந்தக் குரலில் இந்தப் படத்திற்கு டப்பிங் பேசுகிறார். வழக்கமாக தீபா வெங்கட் தான் நயன்தாராவிற்கு டப்பிங் பேசுவார். ஒரு சில படங்களில் மட்டுமே நயன்தாரா சொந்தக் குரலில் குறிப்பிடத்தக்கது.
விக்னேஷ் சிவனும் நயனும் டப்பிங் ஸ்டுடியோவில் காதல் பொங்க காணப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள விக்னேஷ் சிவன் "கண்மணி அன்போடு காதலன் நான் எழுதிய டயலாக் நீயே டப் பண்றது மிகுந்த சந்தோசம்" என்று தெரிவித்துள்ளார்.