இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
தெலுங்குத் திரையுலகில் அடுத்தடுத்து சில பான் - இந்தியா படங்கள் வெளியாக உள்ளன. முதலில் டிசம்பர் 17ம் தேதி அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடித்துள்ள 'புஷ்பா' படத்தின் முதல் பாகம் வெளியாக உள்ளது. அடுத்து ஜனவரி 7ம் தேதி ராஜமௌலி இயக்கியுள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் வெளியாக உள்ளது.
'புஷ்பா' படத்தின் டிரைலரை டிசம்பர் 6ம் தேதி வெளியிடப் போவதாக அதன் தயாரிப்பு நிறுவனம் நேற்று காலை அறிவித்தது. அதற்கடுத்த சில மணி நேரங்களில் 'ஆர்ஆர்ஆர்' தயாரிப்பு நிறுவனம் அவர்களது டிரைலரை டிசம்பர் 3ம் தேதி வெளியிடப் போவதாக அறிவிப்பை வெளியிட்டது.
இரண்டு பெரிய படங்களும் இப்படி ஏட்டிக்குப் போட்டியாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டு படங்களுக்குமே எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
விரைவில் மற்றுமொரு பான்-இந்தியா படமான 'ராதே ஷ்யாம்' படத்தின் டிரைலர் பற்றிய அறிவிப்பும்வெளியாகலாம். தற்போது இப்படத்தின் சில பாடல்கள் மட்டும் அடுத்தடுத்து வெளியாகி வருகீன்றன.