தாஷமக்கான் தலைப்புக்கு என்ன அர்த்தம் | பிளாஷ்பேக்: வரதட்சணை கொடுமைக்கு எதிரான முதல் படம் | ‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! |

கடந்த 25ஆம் தேதி வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடித்துள்ள மாநாடு படம் திரைக்கு வந்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் இரண்டு நாளில் ரூ.14 கோடி வசூலித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தும் மாநாடு படத்தைப்பார்த்து விட்டு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். குறிப்பாக, இயக்குனர் வெங்கட்பிரபு, சிம்பு, எஸ்.ஜே.சூர்யா ஆகியோருக்கு போன் செய்து வாழ்த்தியிருக்கிறார் ரஜினி.
இதுகுறித்த தகவலை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள எஸ்.ஜே. சூர்யா, இன்று எனது நடிப்புத்திறமைக்கு மிகப்பெரிய விருது கிடைத்ததாக உணர்கிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினி சார் எனக்கு போன் செய்து வாழ்த்தினார். உங்களின் அன்பான வாழ்த்து எனது சினிமா பயணத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளது என்று பதிவிட்டுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.




