பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டே இப்போது தென்னிந்திய சினிமாவிலும், பாலிவுட்டிலும் முன்னணி நடிகை. தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்த பூஜா இப்போது பாலிவுட்டிலும் பிஸியாக நடிக்கிறார். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படத்திலும் தமிழில் விஜய்யுடன் பீஸ்ட் படத்திலும் நடித்து வருகிறார்.
சினிமாவை போன்றே சமூக வலைத் தளங்களிலும் பிசியாக இருப்பவர் பூஜா ஹெக்டே. அடிக்கடி தனது நீச்சல் உடை படங்களை பதிவிட்டு பரபரப்பாக்குவார். தற்போது அவர் மாலத்தீவில் தனது விடுமுறையை கழித்து வருகிறார். அங்கு எடுக்கப்பட்ட படங்களை பதிவேற்றி வருகிறார்.
இதற்கிடையில் பூஜா மாலத்தீவு கடலில் ஸ்கூபா டைவிங் எனப்படும் ஆழ்கடல் நீச்சலுக்கு சென்று வந்துள்ளார். ஆழ்கடலில் நீந்தும் படங்களையும் வெளியிட்டுள்ளார். அதோடு நான் நீமோவையும், அவரது நண்பர்களையும் கண்டுபிடித்தேன். அவர்கள் அழகா இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். நீமோ என்பது பிரபல அனிமேஷன் படமான பைன்டிங் நீமோ படத்தின் ஹீரோவான மீன். பூஜாவின் ஆழ்கடல் நீச்சல் படங்கள் வைரலாக பரவி வருகிறது.