சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
எந்த மொழியானாலும் அதில் ஒரு படம் வெளியாகி வெற்றி பெற்றால் அதன் இரண்டாம் பாகம் எடுப்பது குறித்த பேச்சு உடனே கிளம்பி விடும். குறிப்பாக கேங்ஸ்டார் பாணி படங்கள் தான் இந்தப்பேச்சில் அதிகம் அடிபடுகின்றன. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் லூசிபர் படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானபோது, அதன் இரண்டாம் பாகம் எம்புரான் என்கிற பெயரில் உருவாக இருக்கிறது என அதன் இயக்குனர் பிரித்விராஜ் அறிவித்தார். அதற்கான வேலைகளையும் துவங்கியபோதுதான் கொரோனாவின் அடுத்தடுத்த இரண்டு அலைகள் அதை தற்காலிகமாக தடுத்தி நிறுத்தி வைத்துள்ளன.
தற்போது அதேபோல கடந்த சில தினங்களுக்கு முன் துல்கர் சல்மான் நடிப்பில் குருப் என்கிற படம் பான் இந்தியா ரிலீஸாக வெளியானது. ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இந்தப்படம் ரூ.5௦ கோடி வசூலையும் தாண்டி விட்டது. இதை தொடர்ந்து இந்தப்படத்தின் இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் சோஷியல் மீடியாவில் ரசிகர்களுடன் உரையாடியபோது, இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பீர்களா என ரசிகர்கள் கேட்டனர். அதற்கு, “நிச்சயமாக.. அதற்கான வேலையை விரைவில் ஆரம்பிக்க போகிறேன்” என கூறியுள்ளார் ஸ்ரீநாத் ராஜேந்திரன்.