ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
முன்னணி நடிகைகளாக கோலோச்சியவர்கள் ஒருகட்டத்தில் ஒரு பாடலுக்கு ஆடும் லெவலுக்கு இறங்கி வருவதை பார்த்துள்ளோம். அதேசமயம் பீக்கில் இருந்தாலும் கூட நட்புக்காக இன்னொருவரின் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடும் நடிகைகளும் இருக்கிறார்கள். இந்த இரண்டாவது லிஸ்ட்டில் தான் தற்போது சமந்தாவும் சேர்ந்துள்ளார்.
தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்-ராஷ்மிகா நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட சமந்தா சம்மதித்து விட்டார் என்பதும் அதற்காக அவருக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளது என்பதும் தெரிந்த செய்தி தான். இந்தப்பாடலை ஐதராபாத் நகரிலேயே பிரமாண்ட செட் அமைத்து படமாக்குவதற்கு தீர்மானித்து இருந்தார்களாம்..
ஆனால் சமந்தாவோ நகரை விட்டு சற்றே தொலைவில் இருக்கும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இந்தப்பாடலின் படப்பிடிப்பை நடத்துமாறு இயக்குனர் சுகுமாரிடம் வேண்டுகோள் வைத்துள்ளாராம். சமீபத்தில் தனது கணவர் நாகசைதன்யாவிடம் இருந்து பிரிவதாக அறிவித்த சமந்தா, நகரின் அருகில் படப்பிடிப்பு நடந்தால் மீடியாக்களை சந்திக்க வேண்டி வருமே என்பதால் அதை தவிர்ப்பதற்காக இந்த இடமாற்ற கோரிக்கையை வைத்துள்ளாராம்.