புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
சென்னை : ஜெய்பீம் படத்தில் பழங்குடி இளைஞர் ராஜாக்கண்ணுவை கொலை செய்த போலீஸ் அதிகாரியின் உண்மை பெயர் அந்தோணிசாமி என்பதற்கு பதிலாக குருமூர்த்தி என மாற்றியது ஏன் என்று பதிலளிக்க வேண்டும் என நடிகர் சூர்யாவுக்கு பா.ம.க., இளைஞணி தலைவர் அன்புமணி கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: ஜெய்பீம் திரைப்படத்தில், வன்னியர் சமுதாயம் திட்டமிட்டு இழிவுபடுத்தப்பட்டு உள்ளது. இந்தப் படம் தங்களின் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வெளிவந்திருப்பது நியாயமற்றது; மனசாட்சி உள்ளவர்களால் ஏற்க முடியாதது. தயாரிப்பாளர் என்ற முறையில் கீழ்கண்ட கேள்விகளுக்கு நீங்கள் விடையளிக்க வேண்டும். கேள்விகள் விபரம்:
இது உண்மை நிகழ்வு திரைப்படம் தானா?
* கொலையுண்ட பழங்குடி இளைஞர் பெயர் ராஜாக்கண்ணு. அவரை படுகொலை செய்த காவல் துறை அதிகாரி பெயர் அந்தோணிசாமி. ராஜாக்கண்ணுக்காக போராடும் வழக்கறிஞர் பெயர் சந்துரு. விசாரணை அதிகாரியான காவல்துறை ஐ.ஜி.,யின் பெயர் பெருமாள்சாமி என உண்மை நிகழ்வின் கதாபாத்திரங்கள் பெயரையே சூட்டியுள்ளீர்கள். ஆனால், காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்திற்கு மட்டும், அந்தோணிசாமி என்பதற்கு பதிலாக குருமூர்த்தி என மாற்றியது ஏன்; நீதிமன்ற விசாரணையில் அவரை குரு, குரு என்று அழைக்கும் வகையில் காட்சி அமைத்தது ஏன்?
* ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி இப்போது சென்னையில் வாழ்ந்து வருகிறார். தன் கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான போராட்டத்தில், ஊராட்சி தலைவரும், ஊர் மக்களும் தான் தனக்கு உறுதுணையாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் அனைவருமே வன்னியர்கள். திரைப்படத்தில் ஊர் மக்களையும், ஊராட்சி தலைவரையும் கெட்டவர்களாகவும், ஜாதி வெறி கொண்டவர்களாகவும் சித்தரித்தது ஏன்? இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.