பராசக்தி படத்தை வெளியிட தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | பத்து நாள் ராஜாவாக சதீஷ் | சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? | ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! |

டாக்டர் படத்தை தொடர்ந்து சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன் நடிப்பில் உருவாகி வரும் படம் டான். எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன், ஆர்.ஜே.விஜய், சிவாங்கி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதா ரவி, சிங்கம்புலி, ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
நேற்று படத்தின் டப்பிங்கை முடித்தார் சிவகார்த்திகேயன். இதுப்பற்றி, ‛‛அடாது மழையிலும் விடாது டப்பிங் நிறைவு'' என தெரிவித்திருந்தார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கல்லூரி மாணவர் போன்று சிவகார்த்திகேயன் சற்றே உடல் எடை குறைந்து காணப்படுகிறார். இந்த படமே கல்லூரி கதைக்களத்தில் மாணவர்கள் - பேராசிரியர்கள் இடையே நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து கலகலப்பாக உருவாகி வருகிறது. அனிருத் இசையமைக்கிறார். மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.