ஏ.சி.முகில் இயக்கத்தில் பிரபுதேவா முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடித்துள்ள படம் ‛பொன்மாணிக்க வேல்'. நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இமான் இசையமைத்துள்ளார். அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி உள்ள இந்த படம், படப்பிடிப்பு முடிந்து ரிலீஸிற்கு தயாராகி இருந்தது. கொரோனா உள்ளிட்ட பிரச்னைகளால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இந்நிலையில் படத்தை ஓடிடியில் வெளியிட பேசி வந்தனர். இப்போது அது உறுதியாகி உள்ளது. டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் இந்த படம் நவ., 19ம் தேதி ரிலீஸாகிறது. இதற்கான அறிவிப்போடு படத்தின் புதிய டிரைலர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளனர்.