தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு | அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெற்றி பெற வாழ்த்திய ரஜினி | ரசிகர்களுடன் குட் பேட் அக்லி படம் பார்த்து ரசித்த ஷாலினி அஜித் | ஹவுஸ் மேட்ஸ் படத்தை வெளியிடும் சிவகார்த்திகேயன் | சின்னத்திரை டூ வெள்ளித்திரை... தமிழ் பேசும் நடிகைகளுக்கும் வாய்ப்பு : மாறுது சினிமா டிரெண்ட்! | சூர்யா 45 படத்தில் இணைந்த இளம் நடிகை | தனுஷ் 56வது படத்தை இயக்கும் மாரி செல்வராஜ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | வெளிநாடு சென்றாலும் கையோடு குக்கர் எடுத்துச் செல்லும் ராம்சரண்: மனைவி தகவல் |
மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள படம் 'மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்'.. தியேட்டர்களில் தான் வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இந்தப்படம் ஒடிடி தளத்தில் வெளியாக இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இது மலையாள தியேட்டர் உரிமையாளர்கள் இடத்தில் சலசலப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் மோகன்லாலின் வலது கரமாக இருப்பவர் என்பதால் மோகன்லாலும் இயக்குனர் பிரியதர்ஷனும் அவரது இந்த முடிவுக்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.
இது பற்றி இயக்குனர் பிரியதர்ஷன் கூறியுள்ளதாவது : இந்தப்படத்தை உருவாக்குவது என்பது நானும் மோகன்லாலும் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக கண்டுவந்த கனவு.. மிகப்பெரிய செலவில் இந்த படம் எடுக்கப்பட வேண்டும் என்பதற்காக தனது வாழ்க்கையில் சம்பாதித்த மொத்தத்தையும் இந்தப்படத்தில் எங்களை நம்பி போட்டுள்ளார் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர்.. அதனாலேயே நானும் மோகன்லாலும் இதுவரை ஒரு ரூபாய் கூட வாங்காமல் இந்தப்படத்தில் பணியாற்றியுள்ளோம். மிக அதிக சம்பளம் வாங்கக்கூடிய கலை இயக்குனர் சாபு சிரில். கூட, இந்தப்படத்தில் தனது வேலை காலம்காலமாக பேசப்பட வேண்டும் என்பதற்காக, வெறும் 25 லட்சம் மட்டுமே பெற்றுக்கொண்டு வேலை பார்த்துள்ளார்.
தியேட்டரில் இந்தப்படத்தை பார்க்கும்போதுதான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அனுபவம் கிடைக்கும் என்பதற்காக நாங்கள் காத்திருந்தோம்.. ஆனால் நாட்கள் நீண்டுகொண்டே போனதாலும், இந்த இடைப்பட்ட காலத்தில் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் மிகப்பெரிய தொகையை வட்டியாகவே கட்டியதாலும், வேறு வழியின்றி தான் ஒடிடி தளத்தில் இந்தப்படத்தை வெளியிட வேண்டிய சூழல் உருவானது. எங்கள் இருவரில் யாரோ ஒருவர் பிடிவாதம் காட்டியிருந்தாலும் ஆண்டனி இந்தப்படத்தை தியேட்டர்களில் தான் வெளியிட முடிவு செய்திருப்பார்.
ஆனால் அவருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. அவரது நஷ்டத்தின் மீது எங்கள் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள நாங்கள் இருவருமே விரும்பவில்லை. மற்ற யாரையும் விட இந்தப்படம் தியேட்டர்களில் வெளியாகாததில் எங்கள் மூவருக்கும் தான் வருத்தமும் வேதனையும் அதிகம்” என கூறியுள்ளார் இயக்குனர் பிரியதர்ஷன்.