இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? |
வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் உருவான ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்சி. அதன்பிறகு ஆரம்பம், காஞ்சனா-2, கேம் ஓவர் உள்ளிட்ட சில படங்களில் தமிழில் நடித்துள்ளார். தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் பாலிவுட் பக்கம் சென்றார். தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். அந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு அவுட்சைடர் பிலிம்ஸ் என்று பெயர் வைத்துள்ளார். டாப்சி சினிமா பின்புலம் இல்லாமல் இருந்து வந்து சினிமாவில் வென்றவர். எனவே தனது தயாரிப்பு நிறுவனத்திற்கும் இப்படி பெயர் வைத்ததாகத் தெரிவித்தார்.
சமீபத்தில் விவாகரத்து அறிவிப்பு வெளியிட்ட நடிகை சமந்தா பேமிலி மேன் வெப் சீரிஸ் மூலம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதையடுத்து அவருக்கு பாலிவுட்டில் தற்போது பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் சமந்தா நடிக்க இருக்கும் புதிய படத்தை டாப்சியின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
பெண் மையக் கதாபாத்திரம் கொண்ட படமாக உருவாக உள்ளதாம். இந்தப் படத்தின் மூலம் சமந்தா பாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.