என் சினிமா வாழ்க்கையே முடிந்தது என நினைத்தேன் ; அக்ஷய் குமார் வெளியிட்ட அதிர்ச்சி தருணம் | 'துரந்தர்' படத்தை மிஸ் பண்ணினேனா ? நாகார்ஜுனா பதில் | மே மாதத்திற்கு முன்பு வரை ‛ஜனநாயகன்' வெளிவர வாய்ப்பில்லையாம் | தயாரிப்பாளர், இயக்குனர் தமிழழகன் காலமானார் | 2026 துவக்கத்திலேயே கயாடு லோகருக்கு அதிர்ச்சி தந்த 'பங்கி' | மோகன்லால், குஷ்பூ மகள்களின் அறிமுக பட டைட்டிலில் ஒற்றுமை | புறக்கணிப்பு : நேற்று அனுபமா... இன்று ஆண்ட்ரியா | தேர்வுகள் ஆரம்பம் : தியேட்டர்களுக்கு சிக்கல் | பஹத் பாசிலின் தெலுங்கு படத்தில் இணைந்த 'எக்கோ' பட வில்லன் | மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! |

ஸ்ரீகண்டன் ஆனந்த் இயக்கத்தில் வெற்றி, அனு சித்தாரா, ஸ்மிருதி வெங்கட், வேலராமமூர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வனம். இதன் டிரைலரை சசிகுமார், மஞ்சுவாரியர், சேரன் உள்ளிட்ட 24 திரைப்பிரபலங்கள் சமூகவலைதளத்தில் வெளியிட்டனர். மறுஜென்மத்தை மையமாக வைத்து பேண்டஸி த்ரில்லர் கலந்த கதையாக இந்த படம் உருவாகி உள்ளது. விக்ரம் மோகன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவு நிச்சயம் பேசப்படும் என்கிறார்கள். அதற்கேற்றவாறு படத்தின் டிரைலரிலேயே காட்சி அமைப்புகள் சிறப்பாக வந்துள்ளன. குறிப்பாக டிரைலரின் முடிவில் வனம் தொடர்பான டாப் ஆங்கிள் காட்சி அருமையாக உள்ளது.
இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ள விக்ரம் மோகன் கூறுகையில், ‛‛இயக்குனருடன் ஏற்கனவே அறிமுகம் உள்ளதால் இப்படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. முன்பே லொகேஷன் பார்த்து திட்டமிட்டதால் படப்பிடிப்பு எளிதாக இருந்தது, படம் நிச்சயம் பேசப்படும் என்றார்.
வனம் படத்தை கோல்டன் ஸ்டார் புரொடக்ஷன் தயாரிக்க, சக்திவேல் பிலிம்ஸ் தமிழகத்தில் வெளியிடுகிறது. ரான் ஈத்தன் யோகன் இசையமைத்துள்ளார்.




