புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
திருமணம் முடிந்தாலும் தனக்கான இமேஜை சிறிதும் குறைத்துக் கொள்ளாமல் இருக்கிறார் நடிகை காஜல் அகர்வால். அவருக்கு இன்ஸ்டாகிராமில் 20 மில்லியன் பாலோயர்கள் தொடர்வதே இதற்கு சாட்சி. பல இளம் முன்னணி நடிகைகள் இருந்தாலும் சீனியர் கதாநாயகியாக காஜல் அகர்வாலுக்கு திருமணத்திற்குப் பின்னும் இப்படி பாலோயர்கள் கிடைப்பது ஆச்சரியம்தான்.
தற்போது அதிகமான படங்களில் கூட காஜல் நடிக்கவில்லை. தமிழில் 'பாரிஸ் பாரிஸ்' படத்தில் நடித்து முடித்துள்ளார். வெளியீட்டிற்காக இந்தப் படம் காத்துக் கொண்டிருக்கிறது. கமல்ஹாசனுடன் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார்.
தென்னிந்திய அளவில் இன்ஸ்டாகிராமில் அதிகமான பாலோயர்களைப் பெற்றிருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவருக்கு 23 மில்லியன் பாலோயர்கள் இருக்கிறார்கள். இவருக்கு அடுத்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார் காஜல் அகர்வால். 19.4 மில்லியன் பாலோயர்களுடன் சமந்தா, 19.2 மில்லியன் பாலோயர்களுடன் டாப்ஸீ, 18 மில்லியன் பாலோயர்களுடன் ஸ்ருதிஹாசன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறார்கள்.
இந்திய அளவில் நடிகைகளில் பிரியங்கா சோப்ரா 69.5 மில்லியன் பாலோயர்களுடன் முதலிடத்தில் உள்ளார். இன்ஸ்டாவில் 20 மில்லியன் பாலோயர்களைப் பெற்றதற்கு வீடியோ ஒன்றைப் பதிவு செய்து தனது ரசிகர்களுக்கும், பாலோயர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் காஜல்.