விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் | முழு நீள போலீஸ் வேடத்தில் நடிக்க விஜய் தேவரகொண்டா ஆர்வம் | துல்கர் சல்மானின் ‛காந்தா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சுதா இயக்கிய இறுதிச்சுற்று படத்தில் மாதவனுடன் இணைந்து நடித்தவர் குத்துச்சண்ட வீராங்கனையான ரித்திகாசிங். அந்த படம் ஹிட் அடித்த நிலையில் அதன்பிறகு அவர் நடித்த ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா படங்கள் வெற்றி பெறவில்லை. பின்னர் அசோக் செல்வனுடன் ரித்திகா சிங் நடித்த ஓ மை கடவுளே படம் அவரது நடிப்பை பேச வைத்தது. தற்போது பாக்சர், பிச்சைக்காரன்-2 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அடுத்தபடியாக மெகா ஹீரோக்களின் படவாய்ப்பு கைப்பற்ற வேண்டுமென்றால் கமர்சியல் நாயகியாக உருவெடுக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு சில நடிகைகளைப் போன்று தற்போது தானும் கவர்ச்சியாக எடுத்த போட்டோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் ரித்திகா சிங். அதற்கு நெட்டிசன்களும் லைக்குகளை வாரி வழங்குகின்றனர்.