கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி | 2025 - வசூல் படங்களில் முதலிடத்தைப் பிடிக்குமா 'காந்தாரா சாப்டர் 1' ? | விஷால் - சுந்தர் சி கூட்டணி படத்தின் அறிவிப்பு… விரைவில்… | மனிஷாவுக்கு கை கொடுக்குமா 'மெஸன்ஜர்' |
1979ம் ஆண்டு வெளியான மழலை பட்டாளம் என்கிற திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானாவர் குண்டு கல்யாணம். சுமார் 500 க்கும் மேற்பட்ட படங்களில், நகைச்சுவை, துணை நடிகர் போன்ற கதாபாத்திரங்களில் நடித்தார். திரைத்துறையை தாண்டி, இவர் ஒரு தீவிர அதிமுக தொண்டர். தேர்தல் சமயங்களில் அதிமுக கட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்தார்.
தற்போது சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் ஒதுங்கி இருக்கும் குண்டு கல்யாணம் சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்கிற நிலை உள்ளது. ஆனால் தன்னுடைய சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாமல் திண்டாடி வருகிறார்.
குண்டு கல்யாணத்தின் இன்றைய நிலை குறித்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றன் அவரது முகநூல் பக்கத்தில் ஜெயலலிதா இருந்திருந்தால் குண்டு கல்யாணத்தின் அனைத்து மருத்துவ செலவுகளையும் அவரே ஏற்றிருப்பார். ஆனால் இன்றைக்கு அவரை கவனிக்க ஆள் இல்லை. எனவே அதிமுக தொண்டர்கள் சிறு சிறு அளவில் உதவி செய்து அவரை காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.