அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

காவல்துறை வீரர்களின் நினைவேந்தல் நாளை முன்னிட்டு, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், தலைமை காவல் அலுவலர் சசிகலா, வெஸ்லி இணைந்து எழுத, சசிகலாவும்பார்வையற்ற கலைஞரான திருமூர்த்தியும் இணைந்து பாடிய “வீரவணக்கம்” ஆல்பம் பாடலை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
பாடல் குறித்து ஜிப்ரான் கூறியதாவது: கொரோனோவுக்கு பின், முன்கள பணியாளர்களாக பணியாற்றிய, காவல்துறை நண்பர்களை வாழ்த்தும் வகையில், கமிஷனருடன் இணைந்து ஒரு பாடல் செய்தேன். அப்போதே அவர்களின் பணிச்சூழலையும், தியாகங்களையும் கண்டபோது மனம் அதிர்ந்தது. ஒருவர் பணிக்கு திரும்பும்போது மற்றொருவர் கொரோனாவால் மருத்துவமனைக்கு சென்றார். கொரோனாவில் மரணித்தவர்கள் பற்றி நமக்கு தெரியும், ஆனால் காவல்துறை பணியில் இருந்த போதே இறந்தவர்களை பற்றி நமக்கு எதுவுமே தெரியாது. அவர்களை பற்றி கேட்ட, ஒவ்வொரு கதையும் என்னை வெகுவாக பாதித்தது. இசை வலிகளை மறக்கடிக்கும் அவர்களின் வலிகளுக்கு, தியாகத்துக்கு என் சிறு அர்ப்பணிப்பு இந்த பாடல். நம் உயிருக்காவும் பாதுகாப்புக்காவும் அளப்பரிய பணிகள் செய்யும் காவல்துறையினரை இந்நன்நாளில் போற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.