சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா மற்றும் பலர் நடிக்கும் படம் 'அண்ணாத்த'. இப்படத்தின் டீசர், மூன்று பாடல்கள் வெளியாகி ரஜினி ரசிகர்களைத் திருப்திப்படுத்தியுள்ளது.
படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுமா என்பது குறித்து தகவல் இல்லை. கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால் விழாவை பிரம்மாண்டமாக நடத்த முடியாது என்பதால், பாடல்களை ஒன்றன்பின் ஒன்றாக யு டியூபில் வெளியிட உள்ளார்கள் என்றும் தெரிகிறது.
இதனிடையே, நவம்பர் 4ம் தேதி வெளியாகும் இப்படத்திற்காக அமெரிக்காவில் உள்ள தியேட்டர்களை ஒப்பந்தம் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. படத்தின் பிரிமீயர் காட்சியை அமெரிக்காவில் நவம்பர் 3ம் தேதியே நடத்த உள்ளார்களாம். இதுவரை 50க்கும் மேற்பட்ட தியேட்டர்களை உறுதி செய்துள்ளனர்.
அமெரிக்காவில் மட்டும் 300 தியேட்டர்கள் வரை படத்தைத் திரையிட தியேட்டர்களைப் பிடித்து வருகிறார்களாம். ரஜினி நடித்து கடைசியாக கடந்த வருட ஜனவரியில் 'தர்பார்' படம் வெளிவந்தது. அப்படம் ரசிகர்களைத் திருப்திப்படுத்தவில்லை.
சுமார் 22 மாதங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் படம் என்பதால் 'அண்ணாத்த' படத்திற்கு அதிக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.




