காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம் 'டாக்டர்'. கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு மக்களை தியேட்டர்கள் பக்கம் அதிகம் வரவழைத்த படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்றுள்ளது. படம் வெளிவந்து பத்து நாட்கள் கடந்துள்ள நிலையில் ரூ.50 கோடி வசூலைக் கடந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
50 சதவீத இருக்கைகளில் இந்த அளவிற்கு வசூல் என்பது மிகவும் ஆச்சரியம் என மிரண்டு கிடக்கிறது தமிழ்த் திரையுலகம். கொரோனா முதல் அலைக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட போது விஜய்யின் 'மாஸ்டர்' படம்தான் தியேட்டர்களைக் காப்பாற்றியது. அதற்குப் பிறகு வந்த படங்களில் 'சுல்தான், கர்ணன்' படங்கள் ஓரளவிற்கு வசூலித்தது. இப்படங்கள் நல்ல வசூலைப் பெறுவதற்கு முன்பாக கொரானோ இரண்டாவது அலை வந்ததால் தியேட்டர்கள் மூடப்பட்டது.
இந்நிலையில் இரண்டாவது அலைக்குப் பிறகு 'டாக்டர்' படம் வசூல் என்பது 'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு அதிக வசூல் என்றும் சொல்கிறார்கள். தீபாவளி வரை வேறு பெரிய படங்கள் போட்டிக்கு இல்லாத காரணத்தால் 'மாஸ்டர்' வசூலை நெருங்கினாலும் ஆச்சரியப்படுதவற்கில்லை என்கிறார்கள்.
'டாக்டர்' பட வெளியீட்டுச் சிக்கலில் தனது சம்பளத்தை விட்டுக் கொடுத்து படம் வெளிவர பேருதவி புரிந்த சிவகார்த்திகேயனுக்கு தயாரிப்பாளர் முழு சம்பளத்தையும் கொடுத்துவிடுவார் என்றே தெரிகிறது.