சசி, விஜய் ஆண்டனி படத்தலைப்பு நூறுசாமி | மினி இட்லியாக சுவைக்கப்படணும் : பார்த்திபன் ஆசை | கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வரும் குஷி ரவி | ஹீரோவான ‛பிக் பாஸ்' விக்ரமன் | ‛பறந்து போ' கிரேஸ் ஆண்டனிக்கு திருமணம் : 9 வருட காதலரை மணந்தார் | பிளாஷ்பேக் : 33 முறை மோதிய விஜயகாந்த், பிரபு படங்கள் | பிளாஷ்பேக்: முத்துராமலிங்கத் தேவர் பார்த்த ஒரே படம் | இன்று ரவிமோகன் பிறந்த நாள்: சிறப்பு போஸ்டர்கள் வெளியிட்டு வாழ்த்து | மடோனா, இவ்வளவு அழகாகப் பாடுவாரா ? | திருமணம் எப்போது? அதர்வா நச் பதில் |
தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல், தெலுங்கில் சாகுந்தலா ஆகிய படங்களில் நடித்துள்ள சமந்தா அடுத்தபடியாக தமிழ் தெலுங்கில் தயாராகும் இரண்டு படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். அதோடு ஒரு ஹிந்தி படத்திலும் அவர் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் நாக சைதன்யாவை பிரிந்துவிட்ட சமந்தா தற்போது தான் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் அதிலிருந்து விடுபட யோகா, தியானம் மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதோடு மன அழுத்தத்தில் இருந்து விடுபட செல்லப் பிராணிகளுடன் விளையாடி வருவதாகவும் தெரிவித்துள்ள சமந்தா, மன அழுத்தம் தொடர்ந்தால் தனது நண்பர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சமந்தாவின் இந்த பதிவை அடுத்து நெட்டிசன்கள் பலரும் அவருக்கு ஆறுதலான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.