ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி | இறுதிக்கட்டத்தில் 'கேர்ள் பிரண்ட்' : முதல் பாடல் வெளியீடு | புதுமுகங்களின் 'தி கிளப்' | பிளாஷ் பேக்: தயாரிப்பாளர் ஆன எஸ்.எஸ்.சந்திரன் | பிளாஷ்பேக்: மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் | விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி | ரஜினி, கமல் இணைவார்களா? : காலம் கனியுமா? | காளிதாஸ் 2 வில் போலீசாக நடித்த பவானிஸ்ரீ | 2040ல் நடக்கும் ‛ரெட் பிளவர்' கதை |
கடந்த ஆகஸ்ட் மாதம் ஓடிடி தளத்தில் வெளியான தெலுங்கு படம் விவாஹ போஜனம்பு. ராம் அப்பராஜு இயக்கத்தில் சத்யா, ஆர்ஜாவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இதனை சந்தீப் கிஷன் மற்றும் இயக்குநர் சினீஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தார்கள். இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் சந்தீப் கிஷன் நடித்திருந்தார்.
எதற்கெடுத்தாலும் கணக்கு பார்க்கும் சிக்கனவாதியான ஹீரோ, பணக்கார வீட்டு பெண்ணை காதலிக்கிறார். மகள் ஏழையை மணப்பதை விரும்பாத பணக்கார தந்தை திருமண செலவை மாப்பிள்ளைதான் ஏற்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார். சிக்கனவாதியான ஹீரோ எப்படி திருமண விருந்தை செலவில்லாமல் நடத்தலாம் என்று யோசிக்கும்போது கொரோனா ஊரடங்கு அமுலுக்க வருகிறது. திருமணத்துக்கு 30 பேருக்கு மேல் கூடக்கூடாது என்பது அதில் ஒன்று. இதன் பிறகு என்ன நடக்கிறது என்பது படத்தின் கதை. ஒரே வீட்டுக்குள் நடக்கும் காமெடி கதையாக இது உருவாகி இருந்தது.
தற்போது இந்த படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது. இதன் ரீமேக் உரிமையை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள், இயக்குநர் யார் உள்ளிட்ட விவரத்தினை அறிவிக்கவில்லை. குறுகியகால தயாரிப்பாக இந்த படத்தை தயாரிக்க ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.