6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் | 'குடும்பம் ஒரு கதம்பம்' புகழ் குரியகோஸ் ரங்கா காலமானார் : யார் இவர்... சின்ன ரீ-வைண்ட்! | வசூல் நாயகிகளில் முதலிடம் பிடித்த கல்யாணி பிரியதர்ஷன் | தமிழ் மார்க்கெட்டை பிடிக்கும் மலையாள படங்கள் | மாநாடு கவலை அளிக்கிறது : விஜய்யை தாக்கிய வசந்தபாலன் | 17 ஆண்டு கனவு நனவானது : ஹீரோவான ‛பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரன் நெகிழ்ச்சி |
பைவ் ஸ்டார், விரும்புகிறேன், கந்தசாமி, திருட்டுப்பயலே படங்களை இயக்கியவர் சுசி.கணேசன். அதன்பிறகு பாலிவுட் பக்கம் போனார். ஆனால் அங்கு பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. மீண்டும் திரும்பி, திருட்டுபயலே படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார். தற்போது இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்கிறார்.
இந்த படத்திற்கு 'தில் ஹே கிரே' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தமிழில் இதன் அர்த்தம், இதயத்தின் நிறம் சாம்பல். இந்த உலகத்தில் வெள்ளை மனம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். கறுப்பு மனம் உள்ளவர்களும் இருக்கிறார்கள். கிரே இதயம் என்றால் வெள்ளை, கறுப்பு என இரண்டும் கலந்தது. அப்படி ஒரு கிரே இதயம் படைத்த மனிதர்களின் கதையை சொல்லும் படம் என்பதால் இந்த தலைப்பு என்று தலைப்பு விளக்கம் சொல்லியிருக்கிறார்கள்.
இதில் நாயகனாக வினித் குமார் சிங் நடிக்கிறார். நாயகியாக ஊர்வசி ரவுட்லா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் அக்ஷய் ஒப்ராய் நடிக்கிறார். நாயகியின் அம்மாவாக சீதா நடிக்கிறார். சீதா இந்தப் படத்தின் மூலம் முதன் முறையாக ஹிந்தியில் அறிமுகமாகிறார். இவர்களுடன், இயக்குநர் சுசி கணேசன் உயர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். பிரபல கன்னடத் தயாரிப்பு நிறுவனமான சுரஜ் புரொடக்ஷன் எம்.ரமேஷ் ரெட்டி தயாரிக்கிறார்.