அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் |
தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த 'முகமூடி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பின் தெலுங்கில் சில சூப்பர் ஹிட் படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் விஜய் கதாநாயகனாக நடிக்கும் 'பீஸ்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் பூஜா.
பொம்மரிலு பாஸ்கர் இயக்கத்தில் அகில், பூஜா ஹெக்டே நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலர்' தெலுங்குப் படம் வெற்றி பெற்றுள்ளது. சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளையும் கொண்டாடிய பூஜா, டுவிட்டர் தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
அப்போது ரசிகர் ஒருவர், “விஜய் பற்றி ஒரு வார்த்தை” எனக் கேட்டதற்கு, “ஒரு வார்த்தை போதாது, இருந்தாலும் நான் டிரை செய்கிறேன், “ஸ்வீட்டஸ்ட்” என பதிலளித்தார். இந்த ஒரு வார்த்தை போதுமே பூஜாவை விஜய் ரசிகர்கள் கொண்டாடுவதற்கு.
பூஜா தற்போது 'பீஸ்ட்' தவிர, “ஆச்சார்யா, சர்க்கஸ், பைஜான்” ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.