'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன் கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த 'பட்டம் போல' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்தார். தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் 'மாறன்' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதுதவிர பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த படத்தையடுத்து பல படங்களை கைவசம் வைத்துள்ள மாளவிகா, அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தவுள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா, தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் சேலையா, தாவணியா என கூற முடியாதபடி ஒரு ஆடையில் கவர்ச்சியான படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.