அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா | 'டிமான்டி காலனி 3' பணியில் அஜய் ஞானமுத்து! | ரூ.25 கோடிக்கு பிஸ்னஸ் ஆன 'பேடி' பட ஆடியோ உரிமை | உடை மாற்றும் போது அத்துமீறிய இயக்குனர்! - ஷாலினி பாண்டே | 'ரெய்டு 2' படத்தில் சிறப்பு பாடலில் தமன்னா! |
பெங்களூர் இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இந்த விழாவில் 20 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் 30 மொழிகளிலிருந்து தேர்ந்தெடுத்து திரையிடப்பட்டது. அதன் நிறைவு விழா நேற்று நடந்தது, இந்த விழாவில் சிறந்த தென்னிந்திய திரைப்படத்துக்கான விருதை தமிழில் தயாராகி உள்ள கட்டில் படம் பெற்றது. திரைப்படத்திற்கான விருதை அதன் இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு பெற்றார்.
மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இ.வி.கணேஷ்பாபு இயக்கி உள்ள படம். சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்திருக்கும் இத்திரைப்படத்திற்கு எடிட்டர் பீ.லெனின் கதை திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார். பல தலைமுறைகளாக தொடர்ந்து வரும் ஒரு கட்டிலை சுற்றிய கதை. விரைவில் திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது.