பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
பிரபல பத்திரிகையான போர்ப்ஸ் இந்தியா தென்னிந்திய சினிமாவில் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள டாப் 30 சினிமா பிரபலங்களைப் பட்டியலிட்டுள்ளது. அதில், தென்னிந்திய சினிமா பிரபலங்கள்தான் அதிக இடத்தைப் பிடித்துள்ளனர். டாப் 10 பட்டியலில் நடிகை ராஷ்மிகா மந்தனா 10க்கு 9.88 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். தமிழ் நடிகரான சூர்யா 9.37 புள்ளிகள் பெற்று 9வது இடத்தைப் பிடித்துள்ளார்.
தமிழ் நடிகரான தனுஷ் 9.33 புள்ளிகள் பெற்று 13வது இடத்திலும், விஜய் சேதுபதி 9.22 புள்ளிகள் பெற்று 29வது இடத்தையும் பிடித்துள்ளனர். பிரபலங்களின் பதிவுகளுக்குக் கிடைக்கும் லைக்குகுள், கமெண்ட்டுகள், அவர்களைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை, வீடியோக்களின் பார்வைகள், பாலோயர்களின் எண்ணிக்கை, பதிவுகளின் ரீச் ஆகியவற்றைக் கணக்கிட்டு இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்களின் சமீபத்திய 25 பதிவுகள் இதற்காக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
டாப் 10 பட்டியல்
01. ராஷ்மிகா மந்தனா - 9.88 புள்ளிகள்
02. விஜய் தேவரகொன்டா - 9.67
03. யாஷ் - 9.54
04. சமந்தா - 9.49
05. அல்லு அர்ஜுன் - 9.46
06. துல்கர் சல்மான் - 9.42
07. பூஜா ஹெக்டே - 9.41
08. பிரபாஸ் - 9.40
09. சூர்யா - 9.37
10. தமன்னா - 9.36
மகேஷ் பாபு, ராம்சரண், தனுஷ், ஜுனியர் என்டிஆர், காஜல் அகர்வால், ராஷி கண்ணா, ரகுல் ப்ரீத் சிங், இலியானா, நானி, சாய் பல்லவி, டொவினோ தாமஸ், அகில் அக்கினேனி, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், சாய் தரம் தேஜ், மாதவன், வருண் தேஜ், ஷ்ரேயா சரண், விஜய் சேதுபதி, நித்யா மேனன் ஆகியோர் முறையே 11வது இடத்திலிருந்து 30வது இடம் வரை பிடித்துள்ளனர்.