பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் | பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா | 50 பேர் ஆசீர்வாதத்தால் கிடைத்த வாய்ப்பு: நமிதா நெகிழ்ச்சி | ஜெய் படம் மூலம் தமிழுக்கு வரும் கன்னட நடிகை | ஆண்ட்ரியா படத்தின் காட்சிகளை மாற்ற நீதிமன்றம் உத்தரவு | ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா மற்றும் பலர் நடிக்கும் படம் 'அண்ணாத்த'. இப்படத்தின் டீசரை நேற்று யு டியுபில் வெளியிட்டார்கள்.
டீசரைப் பார்த்த பலரும் இது என்ன 'விஸ்வாசம்' படத்தின் இரண்டாம் பாகமா என கிண்டலடிக்க ஆரம்பித்தனர். அந்த அளவிற்கு இரண்டு படங்களுக்கும் வித்தியாசமில்லை என்று சொல்லும் அளவிற்கு டீசர் இருப்பதாக பெரும்பான்மையான ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
ஒரு சிலர் ஒரு படி மேலே போய், 'விஸ்வாசம்' படக் காட்சிகளையும், 'அண்ணாத்த' டீசர் காட்சிகளையும் புகைப்படங்களாக இணைத்து எங்கே வித்தியாசம் உள்ளது என மீம்ஸ்களையும் தெறிக்க விட்டுள்ளனர்.
'விஸ்வாசம்' படத்தில் 50 வயது அஜித் 70 வயது தாத்தா போல வெள்ளை முடி, தாடியுடன் இருப்பார். 'அண்ணாத்த' படத்தில் 70 வயது ரஜினிகாந்த் 50 வயது மனிதர் போல கருப்பு முடி, தாடியுடன் இருக்கிறார். இது மட்டும்தான் வித்தியாசம் என்றும் சிலர் கமெண்ட் செய்துள்ளனர்.
விமர்சனம், கமெண்ட், கருத்து ஆகியவை பலவாறாக இருந்தாலும் 'அண்ணாத்த' டீசர் 43 லட்சம் பார்வைகளைக் கடந்து, யு டியூப் டிரென்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.