'கருடன்' ரீமேக் தோல்வி ஏன் ? நாயகன் விளக்கம் | தெலுங்கில் வரவேற்பைப் பெறும் சிறிய படம் 'லிட்டில் ஹார்ட்ஸ்' | பிளாஷ்பேக்: ஆற்றல்மிகு திரைக்கலைஞர்களை அலைபோல் அறிமுகமாக்கிச் சென்ற “அலைகள் ஓய்வதில்லை” | எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் |
விஜய் படங்களின் அறிவிப்புகள் வந்த உடனேயே நாயகி யார் என்ற கேள்வி தான் அனைத்து தரப்பிலும் விவாதமாகும். விஜய்யுடன் ஜோடி சேர நாயகிகளும் போட்டி போடுவார்கள். அந்த வகையில் நீண்ட நாட்களாக ராஷ்மிகா விஜய்யுடன் ஜோடி போடும் ஆவலில் இருக்கிறார்.
விஜய் நடிப்பில் தற்போது உருவாகும் பீஸ்ட் படப்பிடிப்பே இன்னும் முடிவடையாத நிலையில் அடுத்த படத்துக்கான அறிவிப்பு வந்துவிட்டது. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் இப்படத்தின் நாயகி யார் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில், விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே, கீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் 'பைரவா', 'சர்கார்' படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.